பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Friday, 27 August 2021

பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.



 பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு செப் .1 - ம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் 9, 10, 11, 12 வகுப்புகள் திறக்கப்படவுள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 

 பள்ளிகளில் 9 முதல் 12 - எம் வகுப்புகள் வாரத்தில் 6 நாள்களும் செயல்படும் - பள்ளிக் கல்வித் துறை. வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படவுள்ளனர்.

 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் இல்லையெனில் சுழற்சி முறையில் மாற்று வேலைநாள்களில் வகுப்புகள் செயல்படும்.பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் விருப்பப்படி ஆன்லைனில் கற்கலாம்.

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என உத்தரவு.வீட்டில் இருந்தே படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படுவர வகுப்பறைகளிலும், பள்ளி வளாகத்திலும் மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்