செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐபிஎல் - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Monday, 3 August 2020

செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐபிஎல்

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது
வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகின்றன. சைனாவின் பொருளை இந்தியா புறக்கணித்த நிலையில் ஐபிஎல்லில் சைனாவின் ஸ்பான்சர்ஷிப் ஏற்பது குறித்து நேற்று ஆலோசிக்கப்பட்டது. அதில் பிசிசிஐ சைனாவின் ஸ்பெசிஃபைக் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் விருந்து.ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகிறது.மொத்தமாக 60 போட்டிகள் நடைபெற உள்ளன.இந்த ஆண்டு ஐபிஎல் துபாயில் நடைபெற உள்ள நிலையில்.அனைத்து அணிகளும் துபாய் செல்ல தயாராக உள்ளன சில அணிகள் முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் அணிகளில் மிக சுவாரஸ்யமான அணியாக சென்னை மும்பை பெங்களூர் டெல்லி அணிகளாக உள்ளனர்.இதற்கிடையில் சில போட்டிகள் மட்டும் மதிய போட்டிகளாக நடைபெறுகின்றன.மதிய போட்டி 3:30 மணிக்கு இரவு போட்டி 7:30 மணிக்கு தொடங்குகின்றன.அடுத்த ஆண்டு இரண்டு புது அணிகள் அணிகள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் எதிர்கொள்கின்றனர்.