மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Saturday, 1 August 2020

மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி

மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி

தேவையான பொருள்கள்

கொட்டி வைத்த மட்டன்
சீரகம் ஒரு ஸ்பூன்
பெருஞ்சீரகம் ஒரு ஸ்பூன்
மெழுகு ஒரு ஸ்பூன்
தேவையான அளவு தேங்காய் துருவல் கறிவேப்பிலை தேவையான அளவு
சிறிதளவு மல்லி இலை
2 பச்சை மிளகாய்
ஏழு பல்லு பூண்டு
ஏழு சின்ன வெங்காயம்
தேவையான அளவு பட்டை கிராம்பு ஏலக்காய்
பொட்டுக்கடலை பவுடர் இரண்டு ஸ்பூன்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு ஆயில்


செய்யும் முறை

சீரகம்
பெருஞ்சீரகம்
மெழுகு
தேங்காய் துருவல்
பச்சை மிளகாய்
பூண்டு
சின்ன வெங்காயம்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்

*இவை அனைத்தையும் அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

*குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு
கொத்துக்கறியை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*1/2 மஞ்சள்தூள் 1/2 மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
தண்ணி இல்லாம வேக வைத்துக் கொள்ளவும்.

*4 முதல் 5 விசில் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

*வேகவைத்த கொத்துக்கறியை மீண்டும் மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*பிறகு அரைத்து வைத்த விழுதையும் சேர்த்துக் கொள்ளவும்.

*ஒரு ஸ்பூன் மல்லித் தூள் ஒரு டீஸ்பூன் மட்டன் மசாலா சேர்த்து அதை நன்றாகப் பிசைந்து கொண்டு உருண்டை பிடித்துக் கொள்ளவும்.

*அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி உருண்டை பிடித்து வைத்த உருண்டையை எண்ணெயில் போட்டு நன்றாக பொறித்து எடுக்கவும் சுவையான மட்டன் கோலா உருண்டை ரெடி.