சுவையான வெண்டைக்காய் கூட்டு - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Saturday, 13 June 2020

சுவையான வெண்டைக்காய் கூட்டு

சுவையான வெண்டைக்காய் கூட்டு

தேவையான பொருட்கள்:


வெண்டைக்காய்
புளி - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன்
சிக்கன் மசாலா - 1/2 ஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
கருவேப்பிலை
சீனி - 1/4 ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட்
அரைத்த தேங்காய் விழுது



செய்யும் முறை:


முதலில் புளியை கரைத்துக் கொள்ளவும் கரைத்து வைத்த புளி தண்ணீரில் மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்க்கவேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கிய பிறகு நறுக்கி வைத்த வெண்டைக்காவை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும் கரைத்து வைத்த புளித்தண்ணீரை வெண்டைக்காயுடன் சேர்க்கவும் நன்றாக கொதி வந்த பிறகு சிறிதளவு சீனியை சேர்க்கவும். நன்றாக புளி தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.