அச்சு பணியாரம்
தேவையான பொருட்கள்
ரவை ( 1 கப் )
நெய் தேவையான அளவு
ஜினி ( 3/4 கப் ) ரவை அளந்த கப்
ஏலக்காய் (1/2 ஸ்பூன் )
முட்டை ( 3 )
உப்பு தேவையான அளவு
செய்யும் முறை
ரவையை நன்கு அரைத்து வறுத்துக்கொள்ளவும். பிறகு ஜினியுடன் ஏலக்காய் சேர்த்து பவுடர் பன்னவும். பவுடரில் 3 முட்டை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும். அதில் நன்கு வறுத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறி ஒரு மணிநேரம் வைக்கவும். பிறகு அச்சு பணியாரம் சட்டியில் நெய் வித்து ஒரு மணிநேரம் வைத்த ரவை கலவையை ஊற்றி வேகவைத்து எடுத்தால் சுவையான அச்சு பணியாரம் ரெடி .